சாத்தனூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட செயற்குழு கூட்டம்

சாத்தனூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
தண்டராம்பட்டு
சாத்தனூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் தண்டராம்பட்டை அடுத்த சாத்தனூர் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஏழுமலை முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் சுரேஷ் கலந்து கொண்டு பேசினார். வட்ட தலைவர் ஏழுமலை வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பட்டப்படிப்பு ஊக்கத்தொகை மீண்டும் வழங்க வேண்டும். கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்புவித்தலை மீண்டும் அமல்படுத்த வேண்டும் ஆகியவற்றை நிறைவேற்றக்கோரி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் திருவண்ணாமலை கோட்ட செயலாளர் பழனி, தண்டராம்பட்டு வட்ட கிளை தலைவர் ஏழுமலை, செயலாளர் சிவலிங்கம், அனைத்து வட்ட கிளை பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தண்டராம்பட்டு வட்ட பொருளாளர் அழகேசன் நன்றி கூறினார்.