மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானையில் மாவட்ட விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் கடந்த 6 மாதமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பலகட்ட போராட்டங்களுக்கு பின்னரும் வறட்சி நிவாரணம் வழங்காமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. எனவே வருகிற 15-ந் தேதிக்குள் வறட்சி நிவாரணம், பயிர் காப்பீடு வழங்காவிட்டால் வருகிற 19-ந் தேதி திருவாடானை தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. இதில் திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story