மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி


மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி
x

மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு 14 -ம் ஆண்டு மாவட்ட அளவிலான ஆக்கி லீக் தொடர் போட்டிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்கள் மற்றும் பெரியவர்களுக்கு என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியில் மாவட்டத்திலிருந்து 8 அணிகள் பங்கேற்றன. பள்ளி மாணவர்களுக்கான அணியில் மான்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி முதலிடத்தையும், ராம்கோ வித்யா மந்திர் பள்ளி 2-ம் இடத்தையும், சபரபதி வித்யாலயா பள்ளி 3-ம் இடத்தையும் பெற்றனர். பெரியவர்களுக்கான விளையாட்டு போட்டியில் பசுபதி ஆக்கி நினைவு அணியினர் முதலிடத்தையும், மான் போர்ட் முன்னாள் மாணவர்கள் 2-ம் இடத்தையும், அரியலூர் ஆக்கி அகாடமி 3-ம் இடத்தையும் பெற்றனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஆக்கியை வளர்க்கும் விதமாக ஆக்கி உபகரணங்களை வழங்கினர். இப்போட்டியில் இந்திய அணிக்காக விளையாடும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், முன்னாள் இந்திய வீரர் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்று விளையாடியது குறிப்பிடத்தக்கது.


Next Story