மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி: பெரியகுளம் அணி முதலிடம்


மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி:  பெரியகுளம் அணி முதலிடம்
x

பெரியகுளத்தில் நடந்த மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெரியகுளம் அணி முதல் இடத்தை பிடித்தது

தேனி

பெரியகுளத்தில் தனியார் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியில் தேனி, பெரியகுளம், ஆண்டிப்பட்டி, போடி, கம்பம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 14 அணிகள் பங்கேற்றன.

நாக்-அவுட் முறையில் 2 நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெரியகுளம் அணியும், வடுகப்பட்டி அணியும் விளையாடியது. இதில் பெரியகுளம் அணி 74-65 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்தது. இதையடுத்து பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவில் தேனி மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் அஸ்வின் நந்தா, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், பெரியகுளம் விளையாட்டு கழக தலைவர் மணி கார்த்திக், சீனியர் கூடைப்பந்து பயிற்சியாளர் தினகரன், மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கினர். இதில் முதல் இடம் பிடித்த அணிக்கு பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.


Next Story