மாவட்ட அளவிலான செஸ் போட்டி


மாவட்ட அளவிலான செஸ் போட்டி
x

மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.

திருச்சி

திருச்சி மாவட்ட அளவிலான சிறுவர்கள் மற்றும் ஓபன் செஸ் போட்டி திருச்சி உறையூரில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று நடந்தது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகள் 8, 10, 12 மற்றும் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவுகள் மற்றும் ஓபன் பிரிவில் நடந்தன. முடிவில் ஓபன் பிரிவில் 6 புள்ளிகள் பெற்ற ராம்கைலாஷ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ரதிஐஸ்வர்யாவும், 12 வயதுக்கு உட்பட்ட பிரிவில் நிதினும், 10 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மேகாவும், 8 வயதுக்கு உட்பட்ட பிரிவில் மெகரினும் முதலிடத்தை பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பை, பதக்கம் மற்றும் ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story