மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி


மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
x
தினத்தந்தி 21 Jun 2022 9:40 PM IST (Updated: 21 Jun 2022 9:41 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடந்தது.

நாகப்பட்டினம்

வெளிப்பாளையம்:

நாகையில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. போட்டியை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட சதுரங்க கழக தலைவர் கோவிந்தராஜூலு வரவேற்றார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ராஜா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன், மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நாகை மாவட்டத்தில் 56 அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளை சேர்ந்த 106 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 15 வயதிற்குட்பட்ட மாணவர் மற்றும் மாணவிகளுக்கு 9 சுற்றுகளாக 2 நாட்கள் போட்டி நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. இறுதி சுற்றில் வெற்றி பெறும் 2 போட்டியாளர்கள் சர்வதேச அளவில் நடைபெறும் ஒலிம்பியாட் போட்டியில் பார்வையாளராக பங்கு பெற உள்ளனர். நிகழ்ச்சி தமிழ்நாடு மாநில சதுரங்க கழக மாநில இணைச் செயலாளர் பாலகுணசேகரன், மாவட்ட பொருளாளர் அருண்குமார், பிரைம் கல்வி நிறுவனர் கோவிந்தராஜ், உடற்கல்வி ஆசிரியர் பிரசன்னபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story