வட்டார அளவிலான செஸ் போட்டி


வட்டார அளவிலான செஸ் போட்டி
x

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அந்தந்த வட்டார அளவில் செஸ் போட்டி நடந்தது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அந்தந்த வட்டார அளவில் செஸ் போட்டி நடந்தது.

தலைவாசல்

தலைவாசல் அருகே ஆறகளூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான செஸ் போட்டி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலவைர் ராமசாமி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வேலு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி ஆசிாயிர் ஆர்த்தி வரவேற்று பேசினார்.

செஸ் போட்டியை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். வட்டார அளவில் 40 பள்ளிகளில் இருந்து 170 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அயோத்தியாப்பட்டணம்

அயோத்தியாப்பட்டணம் அருகே வலசையூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான செஸ் போட்டிகள் நடந்தன. 4 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டிக்கு வலசையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் போட்டிகளை தொடங்கி வைத்து பார்வையிட்டார். மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், சேலம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நிர்மலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சி.பி.வைத்திலிங்கம் பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினார். தலைமை ஆசிரியர்கள் ஜோதி, அருள் பிரசாத், சரஸ்வதி, ஒன்றிய கவுன்சிலர் அருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் யோகநாதன், ஸ்டாலின், அன்பன் டேனியல் ஆகியோர் செய்து இருந்தனர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

கருப்பூர்

கருப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான செஸ் போட்டி நடந்தது. இதில் பனங்காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவன் ஸ்ரீதர் மூத்தோர் பிரிவில் கலந்து கொண்டு முதல் பரிசு பெற்று மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றான். இந்த மாணவனை, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தனபாக்கியம் பரமசிவம், தலைமை ஆசிரியர் கீதாராணி, உடற்கல்வி ஆசிரியர் அருள் பிரகாஷ் உள்பட பலர் பாராட்டினர்.


Next Story