மாவட்ட அளவிலான பேச்சு போட்டிஈரோட்டில் 2 நாட்கள் நடக்கிறது


மாவட்ட அளவிலான பேச்சு போட்டிஈரோட்டில்  2 நாட்கள் நடக்கிறது
x

மாவட்ட அளவிலான பேச்சு போட்டி ஈரோட்டில் 2 நாட்கள் நடக்கிறது.

ஈரோடு

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முக்கிய தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளிக்கூடங்கள், கல்லூரிகளின் மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சு போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி அம்பேத்கர், கருணாநிதி ஆகியோர் பிறந்தநாளையொட்டி பேச்சு போட்டி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 9-ந் தேதியும், 10-ந் தேதியும் நடைபெற உள்ளது. பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு மதியம் 2 மணிக்கும் போட்டி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தலைப்புகளை மாணவ- மாணவிகள் படிக்கும் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

இந்த தகவலை ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தெரிவித்து உள்ளார்.


Related Tags :
Next Story