கோத்தகிரியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி


கோத்தகிரியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி
x
தினத்தந்தி 11 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-12T00:16:52+05:30)

கோத்தகிரியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.

நீலகிரி

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் நடப்பாண்டிற்கான சி டிவிஷன் லீக் போட்டிகள் ஊட்டி மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட மைதானத்திலும், கோத்தகிரி காந்தி மைதானத்திலும் நடைபெறுகிறது. நேற்று கோத்தகிரியில் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் எப்.சி. கோத்தகிரி அணியும் மற்றும் எப்.சி. பேந்தர்ஸ் எல்லநள்ளி அணியும் மோதின. இந்த போட்டி டிராவில் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் ஊட்டி ஆர்.எம்.எப்.சி மற்றும் விங்க்ஸ் கால்பந்து அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் ஆட்டம் தொடங்கியது முதல் ஆதிக்கம் செலுத்தி சிறப்பாக விளையாடிய ஆர்.எம்.எப்.சி அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.


Next Story