திருச்சியில் மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி
திருச்சியில் மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி நடைபெற்றது.
திருச்சி மாவட்ட ஹேண்ட்பால் சங்கம் சார்பில் ஆண் மற்றும் பெண்களுக்கான மாவட்ட அளவிலான ஹேண்ட்பால் போட்டி திருச்சி, கே.கே.நகர் அரசு பள்ளி மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் பிரிவில் 15 அணிகளும், பெண்கள் பிரிவில் 15 அணிகளும் பங்கேற்றுள்ளன. தொடக்க நாளான நேற்று 'லீக்' அடிப்படையில் போட்டிகள் நடந்தன. போட்டிகளை மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் ஹேண்ட்பால் சங்க செயலாளர் கருணாகரன், கே.கே.நகர் அரசு பள்ளி தலைமையாசிரியர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். `லீக்' ஆட்டங்களின் முடிவில் ஆண்கள் பிரிவில் காவேரி குளோபல், எஸ்.பி.ஐ.ஓ.ஏ. மெட்ரிக், செல்லம்மாள், எஸ்.ஆர்.எம்.பப்ளிக், வாகிஷா ஆகிய பள்ளிகள் `சூப்பர் லீக்' சுற்றுக்கு முன்னேறின. இதுபோல் பெண்கள் பிரிவில் மான்போர்ட், வாகிஷா, எஸ்.பி.ஐ.ஓ.ஏ., எஸ்.ஆர்.வி.பப்ளிக், செல்லம்மாள் ஆகிய பள்ளி அணிகள் `சூப்பர் லீக்' சுற்றுக்கு தகுதி பெற்றன. இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் `சூப்பர் லீக்' போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.