மாவட்ட அளவிலான கபடி போட்டி


மாவட்ட அளவிலான கபடி போட்டி
x

கரூர் மாவட்ட அளவிலான கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டன.

கரூர்

கபடி போட்டி

கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் வானம்பாடி கபடி குழு, நேரு இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் 25-வது வெள்ளி விழா ஆண்டு மாவட்ட அளவிலான தொடர் கபடி போட்டி நடந்தது. ஆர்.டி.மலை விராச்சிலேஸ்வரர் கோவில் முன்பாக உள்ள வானம்பாடி விளையாட்டு மைதானத்தில் 3 நாட்கள் நடைபெற்ற இந்த கபடி போட்டிக்கு ஊர் முக்கியஸ்தர்கள் தலைமை தாங்கினர்.

இதில் முன்னாள் கபடி வீரர்கள், இளைஞர் அமைப்பினர் முன்னிலை வகித்தனர். இந்த போட்டியில் கரூர், திருச்சி, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 55 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. இதில் பரபரப்பான இறுதி போட்டியில் கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைக்கழகம் அணியும், திருப்பூர் ஜீஸ் ஸ்போர்ட்ஸ்வியர் அணியினரும் எதிர் கொண்டனர்.

பரிசு

இறுதியாக முதல் பரிசினை கோயம்புத்தூர் அணியினர் பெற்று ரூ.40 ஆயிரத்து 1 மற்றும் 6 அடி உயரம் கொண்ட சுழல் கோப்பையினை தட்டிச்சென்றது. 2-வது பரிசான ரூ.25 ஆயிரத்து 1 மற்றும் 5 அடி உயரம் கொண்ட சுழல் கோப்பையினை திருப்பூர் அணியினர் பெற்றனர்.

3-வது பரிசான ரூ.15 ஆயிரத்து 1 மற்றும் 4 அடி உயரம் கொண்ட சுழல் கோப்பையை கரூர் மாவட்டம் நெய்தலூர் காலனி விடிவெள்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் கபடி குழுவினரும், 4-வது பரிசான ரூ.12 ஆயிரத்து 1 மற்றும் 3 அடி உயரம் கொண்ட சிறப்பு கோப்பையினை தூத்துக்குடி ஜான் டேட்ஸ் கபடி கிளப் அணியும் பெற்றனர். மேலும் கால் இறுதியில் தோல்வியுற்ற அணிகளுக்கு ரூ.2,500 சிறப்பு பரிசுகள் உள்பட சிறந்த அணி, சிறந்த வீரர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான கபடி ரசிகர்கள் கலந்து கொண்டு போட்டியை பார்த்து ரசித்தனர்.


Next Story