மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்


மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்
x

மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கின.

திருச்சி

விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு முழுவதும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் என 5 வகை பிரிவினருக்கு மாவட்ட அளவில் தடகளம், கபடி, இறகுப்பந்து, கைப்பந்து, சிலம்பம், சதுரங்கம், கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து, ஆக்கி உள்பட பல்வேறு போட்டிகள் நேற்று தொடங்கின.

இந்த போட்டிகள் வருகிற 28-ந் தேதி அண்ணா விளையாட்டு அரங்கம், ஜெ.ஜெ.பொறியியல் கல்லூரி, ஜமால்முகமது கல்லூரி ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இதில் நேற்று மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் சிலம்பம், இறகுபந்து பொதுபிரிவு ஆகிய போட்டிகளை அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி வைத்தார்.

ரொக்கப்பரிசு

மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல்பரிசாக தலா ரூ.3 ஆயிரம், 2-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரம், 3-ம் பரிசாக தலா ரூ.1,000 வீதம் அனைத்து பிரிவுகளுக்கும் மொத்தமாக ரூ.41 லட்சத்து 58 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது. தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஆண்டனி ஜோயல் பிரபு, விளையாட்டு விடுதி மேலாளர் ஞானசுகந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story