மாவட்ட அளவிலான யோகாசன போட்டி


மாவட்ட அளவிலான யோகாசன போட்டி
x

மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடந்தது.

திருச்சி

திருச்சி மாவட்ட யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி-2023 திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் நேற்று நடைபெற்றது. மாவட்ட யோகாசன ஸ்போர்ட்ஸ் மேம்பாட்டு சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த போட்டியை அமைச்சர் அன்பில்மகேஷ்பொய்யாமொழி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். யோகா சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் ராஜசேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் மாவட்டத்தில் உள்ள 50 பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் 3 வயது முதல் அனைத்து வயது பிரிவினரும் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றவர்கள் ஆகஸ்டு மாதம் நடக்கும் மாநில போட்டியில் பங்கேற்பார்கள். அதில் வெற்றி பெறுபவர்கள் ராஜஸ்தானில் நவம்பரில் நடக்கும் தேசிய போட்டிக்கு அழைத்து செல்லப்படுவார்கள். இந்த போட்டியில் துருவ்சந்திரன், சஞ்சய், லோகித், சந்தோஷினி, குகனிக்ஷா, ஆயுஷிதலால், பிரித்தீஷ், கீர்த்தனா, யோஷ்வின், தன்ஸ்ரீ, மொகித்சன், டிஷா, ரத்தினகுமார், ஜெயவந்தி, குருசரண், சம்யுக்தா, பாரதிபிரியா, ராஜவேல், தமிழ்வாணன், காயத்ரி, மாணிக்ககுமரி, டி.ராஜவேல், ராஜகுமாரிரம்யா, பரமேஷ்வரன் ஆகியோர் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல்படை முதலணி கமாண்டண்ட் ஆனந்தன் பரிசுகளை வழங்கினார்.

1 More update

Next Story