தென்னந்தோப்புகளில் மாவட்ட குழு ஆய்வு


தென்னந்தோப்புகளில் மாவட்ட குழு ஆய்வு
x
தினத்தந்தி 30 April 2023 12:15 AM IST (Updated: 30 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்னந்தோப்புகளில் மாவட்ட குழு ஆய்வு

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

கோவை வேளாண் இணை இயக்குனர் முத்துலட்சுமி தலைமையில் அதிகாரிகள் லதா, அருள்பிரசாந்த் ஆகியோர் கொண்ட குழுவினர் ஜே.கிருஷ்ணாபுரம், தாளக்கரை, குமாரபாளையம், மலைப்பாளையம், சிறுகளந்தை உள்ளிட்ட கிராமங்களில் உள்ள தென்னந்தோப்புகளில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த மாவட்ட அளவிலான குழுவினர் நடத்திய ஆய்வில் கேரள வாடல் நோய், இலை கருகல் நோய் பாதிப்பு மற்றும் நுண்ணூட்ட சத்து குறைபாடு, களைகொல்லி அதிக அளவில் பயன்படுத்துதல், அதிக அளவு நீர்பாய்ச்சுதல், அதிக அளவில் கோழி எரு இடுதல், பேரூட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டன. இதை தவிர்க்க தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மையை கடைபிடிக்க விவசாயிகளை அறிவுறுத்தினர். அப்போது தென்னை நுண்ணூட்ட உரத்திற்கு மானியம் பெற்றுத்தருமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story