மாவட்ட திட்டக்குழு கூட்டம்
ராமநாதபுரம் மாவட்ட திட்டக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது
ராமநாதபுரம், ஜூன்.29-
ராமநாதபுரம் மாவட்ட திட்டக்குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. திட்டக்குழு தலைவர் மாவட்ட ஊராட்சி தலைவர் திசைவீரன், துணை தலைவர் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தனர். நவாஸ்கனி எம்.பி., காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிதாக பொறுப்பேற்ற திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் பேசும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரையில் குடிநீர் பற்றாக்குறையாக உள்ளது. அந்த குறையை போக்க பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அதில் குறிப்பாக காவிரியில் இருந்து புதிய கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாவட்டத்தில் குடிநீர் ஆதாரங்களை பாதுகாப்பதற்கும், பள்ளிக்கூடங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேலுச்சாமி, திட்ட இயக்குனர் அபிதாஹனிப், திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.