மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல்: தி.மு.க. கவுன்சிலர்கள் 12 பேர் வெற்றி
மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர்கள் 12 பேர் வெற்றி பெற்றனர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் 12 பேரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் தேர்தலில் 10 இடங்களுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 3 பேரும் போட்டியிட்டனர். இதில் தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேர் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றனர்.
இதேபோல் நகராட்சி, பேரூராட்சி வார்டு கவுன்சிலர்களில் 2 இடங்களுக்கு தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் ஏற்கனவே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர்கள் 12 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
Related Tags :
Next Story