வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நூதன பிரசாரம்


வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நூதன பிரசாரம்
x

சாலை விபத்துகளை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

சிவகாசி,

சாலை விபத்துகளை தடுக்க வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நூதன பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

வாகனங்களின் எண்ணிக்கை

சிவகாசி வட்டாரத்துக்கு உட்பட்ட பகுதியில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மோட்டார் சைக்கிளின் எண்ணிக்கை லட்சங்களை கடந்து விட்டது. ஆனால் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் தரமான சாலைகள் சிவகாசி பகுதியில் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தினமும் 2 சாலை விபத்துக்கள் நடக்கும் சூழ்நிலை சிவகாசியில் நிலவுவதால் விபத்துகளை தவிர்க்க தேவையான நடவடிக்கைகளை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.

விழிப்புணர்வு பிரசாரம்

சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் சிவகாசி வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல், மோட்டார் வாகன ஆய்வாளர் கார்த்திகேயன் ஆகியோர் அந்த வழியாக சென்ற வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது விதிகளை கடைபிடிக்காத வாகன ஓட்டிகளை மொத்தமாக நிறுத்தி வட்டார போக்குவரத்து அலுவலர் குமரவேல் நூதனமான முறையில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்ட கூடாது. வாகனத்தில் அதிக சத்தம் வரும் சைலன்சர்களையும், கைபிடிகளையும் மாற்றி அமைக்க கூடாது. ஹெல்மெட் மீது கேமரா பொருத்த கூடாது. காரில் பின் சீட்டில் அமர்ந்து செல்பவர்கள் கூட சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் என்றார். இந்த விழிப்புணர்வு பிரசாரம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story