பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்


பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம்;  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
x
தினத்தந்தி 15 Sept 2022 6:26 AM IST (Updated: 15 Sept 2022 7:59 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் இன்று (வியாழக்கிழமை) அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

சென்னை,

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களுக்கு சென்றார். மதுரையில் அரசு விருந்தினர் இல்லத்தில் முதல்-அமைச்சர் தங்கியிருக்கும் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) காலை 7.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.

காலை 7.25 மணிக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, 7.30 மணிக்கு நெல்பேட்டையில் உள்ள மைய சமையல் கூடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். அங்கு காலை உணவு எடுத்துச்செல்லும் வாகனங்களை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார். பின்னர், காலை 8 மணிக்கு ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அங்கு மாணவர்களுக்கு அவர் காலை உணவை பரிமாறுகிறார். பின்னர், மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிடுகிறார்.

1 More update

Next Story