விமானம் தரை இறங்குவதில் இடையூறு - கொளப்பாக்கத்தில் 146 வீடுகளின் உயரத்தைக் குறைக்க நோட்டீஸ்


விமானம் தரை இறங்குவதில் இடையூறு - கொளப்பாக்கத்தில் 146 வீடுகளின் உயரத்தைக் குறைக்க நோட்டீஸ்
x

கொளப்பாக்கத்தில் உள்ள 146 வீடுகளின் உயரம் விமானம் தரை இறங்க இடையூறாக இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

காஞ்சிபுரம்,

சென்னை விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கம் வரை அமைந்துள்ளது. இந்த நிலையில் கொளப்பாக்கத்தில் உள்ள 146 வீடுகளின் உயரம் விமானம் தரை இறங்க இடையூறாக இருப்பதாகவும், எனவே அந்த வீடுகளின் உயரத்தைக் குறைக்க வேண்டும் எனவும் விமான நிலைய அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

இடத்திற்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு வீட்டின் உயரத்தையும் 5 மீட்டரில் இருந்து 9 மீட்டர் வரை குறைக்க வேண்டும் என அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவரின் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.



1 More update

Next Story