சமரச மையங்களை நாடுவதன் மூலம் விவாகரத்து வழக்குகள் குறையும்


சமரச மையங்களை நாடுவதன் மூலம் விவாகரத்து வழக்குகள் குறையும்
x

சமரச மையங்களை நாடுவதன் மூலம் விவாகரத்து வழக்குகள் குறையும் என நீதிபதி திலகம் கூறினார்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

சமரச மையங்களை நாடுவதன் மூலம் விவாகரத்து வழக்குகள் குறையும் என நீதிபதி திலகம் கூறினார்.

கலந்துரையாடல் நிகழ்ச்சி

ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் மாவட்ட சமரச மையத்தின் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஐகோர்ட்டு நீதிபதி சிவஞானம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார். மாவட்ட செசன்ஸ் நீதிபதி திலகம் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றினார்.

சமரச மையத்தின் செயலாளர் நீதிபதி பிரீத்தா, மாவட்ட நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த், அனைத்து நீதிமன்ற நீதிபதிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கலந்துரையாடலில் கலந்து கொண்ட வக்கீல்களின் சந்தேகங்களுக்கு தமிழ்நாடு சமரச மைய பயிற்சி இயக்குனர் விஜய கமலா பதில் அளித்து பேசினார்.

ரகசியம் காக்கப்படும்

சமரச மையத்தின் செயல்பாடுகள், அதில் தொடரப்படும் வழக்குகள் குறித்தும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி திலகம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அனைத்து நீதிமன்றங்களிலும் சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோர்ட்டில் வழக்கு தொடரும் முன்னர் சமரச மையத்தை அணுகி உங்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம். சமரச மையத்தில் நடைபெறும் அனைத்து பேச்சு வார்த்தைகளுக்கும் ரகசியம் காக்கப்படும்.

விவாகரத்து வழக்கு

உங்கள் வாழ்க்கையை எந்த வகையிலும் பாதிக்காது. மேலும் விவாகரத்து வழக்குகள் போடும் முன் சமரச மையங்களை நாடுவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளை எளிதாக தீர்த்துக் கொள்ளலாம்.

இதன் மூலம் விவாகரத்து வழக்குகள் குறைய வாய்ப்புகள் உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story