தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வார சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு    அத்தியூர் வார சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை
x
தினத்தந்தி 18 Oct 2022 6:45 PM GMT (Updated: 18 Oct 2022 6:46 PM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அத்தியூர் வார சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையானது.

கள்ளக்குறிச்சி


ரிஷிவந்தியம்,

வாணாபுரம் அடுத்த அத்தியூர் கிராமத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் காலை நேரத்தில் நடைபெறும் ஆடுகள் விற்பனை சந்தையில் கள்ளக்குறிச்சி மட்டுமின்றி விழுப்புரம், சென்னை, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த வியாபாரிகள் என்று 100-க்கும் மேற்பட்டவர்கள் வந்து ஆடுகளை வாங்கி செல்வார்கள்.

புரட்டாசி மாதம் என்பதால் கடந்த 4 வாரங்களாக ஆடுகள் விற்பனை மந்தமாக இருந்தது. இந்த நிலையில், தற்போது புரட்டாசி மாதம் நிறைவு பெற்றதுடன், வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகை என்பதால், நேற்று வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடந்தது.

ரூ.1 கோடிக்கு...

ஆடுகள் வாங்குவதற்காக அதிகாலை முதலே வியாபாரிகள் அங்கு குவிந்தனர். அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஆடுகளை வாங்கி சென்றனர். இதில் நேற்று ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் ஆடுகள் விற்பனையாகி இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் அங்கு குவிந்ததால் ,அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.


Next Story