தீபாவளி பண்டிகை: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு.!
தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
சென்னை,
தமிழகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காலை முதலே சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். சென்னை வடபழனியில் உள்ள முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம், பழனி திருக்கோயில், திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story