தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் ஒருங்கிணைந்த தே.மு.தி.க. சார்பில் தமிழக அரசை கண்டித்து சின்னப்பா பூங்காவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தே.மு.தி.க. கட்சியின் மாநில கலை இலக்கிய துணை செயலாளர் பிரசன்னா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தது போல அனைத்து மகளிருக்கும் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் ஏழுப்பினர். இதில் வடக்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், தெற்கு மாவட்ட செயலாளர் கோட்டை பி.எல்.ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story