தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்; 7-ந்தேதி நடைபெறும் என அறிவிப்பு

Image Courtesy : @dmdkparty2005
பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 7-ந்தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தே.மு.தி.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் வரும் 07.02.2024 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்ட கழக செயலாளர் அனைவரும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்."
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






