குமாரபாளையத்தில்தே.மு.தி.க. கொள்கை விளக்க பொதுக்கூட்டம்விஜய பிரபாகரன் பங்கேற்பு
திருச்செங்கோடு:
குமாரபாளையத்தில் நடந்த தே.மு.தி.க. கொள்கை விளக்க பொதுக்கூட்டத்தில் விஜய பிரபாகரன் பங்கேற்றார்.
கொள்கை விளக்க கூட்டம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தே.மு.தி.க. கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் வடக்கு மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் நாராயணசாமி, மாவட்ட அவைத்தலைவர் சவுந்திரராஜன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் சக்திவேல், பாலச்சந்திரன், தனலட்சுமி, பள்ளிபாளையம் நகர செயலாளர் வெள்ளியங்கிரி, படைவீடு பேரூர் செயலாளர் நந்தகுமார், ஒன்றிய செயலாளர் மணிவண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், மாவட்ட மாணவர் அணி துணை செயலாளர் நாகராஜ், மாவட்ட தொண்டரணி செயலாளர் செல்வம், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ரவிக்குமார், வர்த்தகர் அணி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கட்சியின் தலைவர் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:- நீங்கள் இருக்கும் தைரியத்தில் தான் நான் இருக்கிறேன். விஜயகாந்த் மீது காட்டிய அன்பை என் மீதும் காட்டுகிறீர்கள். உதயநிதி ஸ்டாலின் தானாக வரவில்லை. 6 முறை முதல்-அமைச்சரின் இருந்தவரின் பேரனாக வந்துள்ளார். அண்ணாமலை பா.ஜ.க.விற்கு வேலை பார்க்கிறார்.
குரல் ஒலிக்கும்
செந்தில் பாலாஜியை எதற்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றினார்கள்? அரசு மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா? நீட் தேர்வை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரத்து செய்யவில்லை. தமிழகத்தில் தற்போது போட்டோ சூட் ஆட்சி தான் நடந்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி கூட்டத்தில் ஆட்களை கட்டாயப்படுத்தி அழைத்து வந்து அமர வைக்கிறார்கள். 2024-ம் ஆண்டு எம்.பி. தேர்தலில் தே.மு.தி.க. வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் கட்சி எம்.பி.யின் குரல் ஒலிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், மாவட்ட கேப்டன் மன்றம், மாவட்ட மகளிர் அணி, மாணவர் அணியினர் மற்றும் முன்னாள் ஒன்றிய பேரூர் செயலாளர்கள், மாவட்ட தலைமை நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், துணை செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.