தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
நெமிலி அருகே தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை
நெமிலி அடுத்த சேந்தமங்கலம் பகுதியில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான வடிவேலு தலைமை தாங்கினார்.
சிறப்பு பேச்சாளராக கவிஞர் வீரமுரசு கலந்துகொண்டு பேசினார். அப்போது கடந்த 2 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் மகளிருக்கு பஸ்களில் இலவச பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 17 லட்சம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுள்ளதாக பேசினார்.
இதில் நெமிலி கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story