அத்தாணியில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்; காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்
அத்தாணியில் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம்; காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்
அந்தியூர்
ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் அந்தியூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட தி.மு.க. வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் அத்தாணியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர், 18 வயது நிரம்பியவர்கள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கு முகவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் மாற்றம், முகவரி மாற்றம் ஆகியவற்றை முன் நின்று செய்து கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். அமைச்சர்களும் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு, பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் சிவபாலன், சரவணன், ரவீந்தரன், மற்றும் பேரூர் கழக செயலாளர் எஸ்.கே.காளிதாஸ். வர்த்தக அணி அமைப்பாளர் கே.பி.எஸ்.மகாலிங்கம், நெசவாளர் அணி அமைப்பாளர் முருகேசன், தமிழ்நாடு கோ-அப் டெக்ஸ் இயக்குனர் எஸ்.பி.ரமேஷ், அத்தாணி முன்னாள் பேரூராட்சி தலைவர் செந்தில் கணேஷ், பேரூராட்சி மன்ற தலைவர்கள் உள்பட கட்சி நிர்வாகிகள், முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.