தர்மபுரி நகரதி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்


தர்மபுரி நகரதி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
x
தினத்தந்தி 10 April 2023 12:30 AM IST (Updated: 10 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி நகர தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகர அவைத்தலைவர் அழகுவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் நாட்டான் மாது வரவேற்று பேசினார். மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி, மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர் டாக்டர் தருண் ஆகியோர் கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்து விளக்கி பேசினர். தர்மபுரி நகராட்சி பகுதியில் உள்ள 33 வார்டுகளிலும் தலைமை அறிவித்தபடி உறுப்பினர் சேர்க்கை பணியை விரைந்து முடித்து அதற்கான படிவங்களை மாவட்ட தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி ஆதரவு திரட்ட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர துணை செயலாளர்கள் முல்லைவேந்தன், அன்பழகன், கோமளவள்ளி ரவி, நகர பொருளாளர் சம்மந்தம், மாவட்ட பிரதிநிதிகள் கனகராஜ், சுருளிராஜன், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் காசிநாதன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கவுதம், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவி, மாவட்ட தொண்டரணி செயலாளர் ராஜா உள்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story