தி.மு.க. ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்


தி.மு.க. ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x

தி.மு.க. ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி பங்கேற்றனர்.

ராணிப்பேட்டை

காட்பாடி தொகுதிக்குட்பட்ட பொன்னையில் காட்பாடி வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தி.மு.க. ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. நீர்வளம் மற்றும் கனிமவளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் சி.ரவி வரவேற்றார்,

சிறப்பு விருந்தினராக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, தி.மு.க. ஆட்சியில் தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பஸ் பயணம், வீடு தேடி கல்வி திட்டம், இல்லம் தேடி மருத்துவம் குறித்தும், தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூக நீதி ஆட்சி நடைபெற்று வருகிறது என்றும் காட்பாடி தொகுதியில் தற்போது நடைபெற்று பல்வேறு திட்டங்கள் குறித்தும் கூறினார்.

முன்னதாக இன்னிசை கச்சேரி நடைபெற்றது

நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட அவைத்தலைவர் முகமது சகி, துரைசிங்காரம், மாவட்ட பொருளாளர் நரசிம்மன், வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், காட்பாடி ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் சரவணன், காட்பாடி தொகுதி தெற்கு ஒன்றிய செயலாளர் கருணாகரன், மேற்கு ஒன்றிய செயலாளர் தணிகாசலம், காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா, பொதுக்குழு உறுப்பினர் தயாநிதி, காந்தி நகர் பகுதி செயலாளர் பரமசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story