தி.மு.க. சாதனை விளக்க கூட்டம்
மூலச்சி கிராமத்தில் தி.மு.க. சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி யூனியன் மூலச்சி கிராமத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மூலச்சி சீவலமுத்துக்குமார் தலைமை தாங்கினார். எஸ்.சி., எஸ்.டி. மாவட்ட அமைப்பாளர் குருநாதன் முன்னிலை வகித்தார். சேரன்மாதேவி மேற்கு ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் வரவேற்று பேசினார். தலைமை கழக பேச்சாளர் நெல்லை மணி சிறப்புரையாற்றினார்.
சேரன்மாதேவி யூனியன் தலைவர் பூங்கோதை குமார், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் வேல்முருகன், அவைத்தலைவர் வெங்கடேசன், பஞ்சாயத்து தலைவர்கள் மூலச்சி சமுத்திரக்கனி, மலையான்குளம் சித்ரா, தெற்கு வீரவநல்லூர் சந்தனமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story