தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்


தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானையில் தி.மு.க. சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானையில் தி.மு.க. இளைஞர் அணி மற்றும் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் தி,மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க தெருமுனை பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. திருவாடானை தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளர் செங்கமடை சரவணன் தலைமை தாங்கினார்.முன்னாள் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அறிவழகன், ஒன்றிய விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஆலம்பாடி கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தி.மு.க. மாநில இலக்கிய அணி துணைச்செயலாளர் ஆடுதுறை உத்திராபதி கலந்து கொண்டு தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். இதில் திருவாடானை யூனியன் தலைவர் முகம்மது முக்தார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வக்கீல் கார்த்திகேயன், யூனியன் துணைத்தலைவர் செல்வி பாண்டி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்து மனோகரன், ஒன்றிய தி.மு.க. அவைத் தலைவர் கணேசன், ஒன்றிய பொருளாளர் ஊராட்சி மன்ற தலைவர் அரும்பூர் சசிகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் திருவாடானை இலக்கியாராமு, கோடனூர் ஊராட்சி தலைவர் ஆலம்பாடி காந்தி, கல்லூர் கஸ்தூரி சுப்பிரமணியன், ஒன்றிய துணைச் செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய கலைஞர் கலை இலக்கிய பகுத்தறிவு பாசறை செயலாளர் அஞ்சுகோட்டை சுரேஷ், தலைமை கழக பேச்சாளர் வக்கீல் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருவாடானை நகரச் செயலாளர் பாலமுருகன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story