தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு


தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x

கந்திலி ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

திருப்பத்தூர்

கந்திலி ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து ஒன்றிய கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

வெளி நடப்பு

கந்திலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக் குழு தலைவர் திருமதி திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஜி.மோகன் குமார் முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாவதி கூட்டத்தை நடத்த முயன்ற போது தி.மு.க. கவுன்சிலர்கள் 10 பேர், அ.தி.மு.க. கவுன்சிலர் 8 பேர், பா.ஜ.க. கவுன்சிலர் ஒருவர், சுயேட்சை கவுன்சிலர் என 20 கவுன்சிலர்களும், ஒன்றிய கவுன்சிலர்கள் மூலம் ஊராட்சியில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை, ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்களை மதிப்பதில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி கட்சி பாகுபாடு இன்றி அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் சின்னத்தம்பி தலைமையில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு நிதி அளித்து ஊராட்சியில் வளர்ச்சி பணிகள் செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறினார்கள்.

கூட்டம் ஒத்திவைப்பு

அனைத்து கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்ததால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டதாக ஒன்றியக் குழு தலைவர் திருமதி முருகன் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து ஒன்றியக் குழு தலைவர் தலைமையில் தி.மு.க. கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர்.


Next Story