தி.மு.க. இளைஞர் அணி பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தி.மு.க. இளைஞர் அணி பொறுப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
கைத்தறி துணிநூல் துறை அமைச்சரும், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான ஆர்.காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சரும், இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர்அறிவுறுத்தலின்படி, ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஒன்றிய, நகர, பேரூர் ஆகிய பகுதிகளுக்கு அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது.
இப்பொறுப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் விண்ணப்ப படிவங்கள் பெற்று அதை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) மாலைக்குள் மாவட்ட அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.
ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்புகளுக்கு விண்ணப்பிப்போர் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வி சான்றிதழ், வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் தெளிவாகவும் முழுமையாகவும் நிரப்ப வேண்டும்.
ஏற்கனவே பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீண்டும் விண்ணப்பிக்க விரும்பினால் அவர்களும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.