தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் நியமனம்
மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் நியமனம் செய்யப்பட்டார்.
குத்தாலம்:
மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளராக குத்தாலத்தை சேர்ந்த அறிவுச்செல்வனை தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி பொதுச்செயலாளர் துரைமுருகன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் ஒப்புதலோடு, மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க. செயலாளர் நிவேதா முருகன் எம்.எல்.ஏ. பரிந்துரையின் பேரில் தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன் எம்.பி. நியமனம் செய்து அறிவித்தார். மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்ட அறிவுச்செல்வனுக்கு குத்தாலம் பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் கார்த்திக், துணை அமைப்பாளர் சுரேந்தர், 14-வது வார்டு நிர்வாகி முருகராஜ் தி.மு.க. நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இவர் தற்போது குத்தாலம் ஒன்றியம் கடலங்குடி ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.