சாட்டை துரைமுருகன் மீது போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் புகார்
சாட்டை துரைமுருகன் மீது போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் புகார் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை
ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் தி.மு.க. நகர துணை செயலாளர் செங்கோல் தலைமையில், தி.மு.க.வினர் புகார் மனு அளித்தனர். அதில், நாம் தமிழா் கட்சிைய சேர்ந்த சாட்டை துரைமுருகன் என்பவர், தி.மு.க. மற்றும் தமிழ்நாடு அரசு குறித்தும் தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் பல்வேறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் அமைச்சர் மெய்யநாதன் மீது அவதூறான கருத்துக்களை பேசி வீடியோ எடிட் செய்து அதனை யூ டியூப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோல் மயிலாடுதுறையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் மெய்யநாதன் பேசிய கருத்துக்களை எடிட் செய்து அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டுள்ளார். எனவே அவர் மீது நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Related Tags :
Next Story