தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்


தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 9 May 2023 3:45 AM IST (Updated: 9 May 2023 3:45 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பெண் ஊராட்சி தலைவரை கண்டித்து தி.மு.க. கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

கோயம்புத்தூர்

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியம் செலக்கரிச்சல் ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளது. இங்கு அ.தி.மு.க.வை சேர்ந்த மரகத வடிவு என்பவர் ஊராட்சி தலைவராக உள்ளார். இதற்கிடையே கடந்த 6 மாதங்களாக தி.மு.க. கவுன்சிலர்கள் 5 பேர், ஊராட்சி தலைவர் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி கூட்டங்களில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று தி.மு.க. கவுன்சிலர்கள் ஊராட்சி செயல்பாடுகள் முறையாக நடைபெறவில்லை, முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கூறி தலைவரை கண்டித்து ஊராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த பொதுமக்கள் சிலர் ஊராட்சி தலைவருக்கு ஆதரவாக ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சிகளின் உதவி இயக்குனர் பஷீர் அகமது கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் அவர்கள் சமரசம் அடைந்தனர். இதேபோல் சூலூர் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மக்கள் கலைந்து சென்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் மற்றும் பிற கவுன்சிலர்கள் ஊராட்சி தொடர்பான தகவலை முறையாக தெரிவிக்க வேண்டும் என்றனர். இதைத்தொடர்ந்து வாட்ஸ் அப் குழு ஏற்படுத்தி, அனைத்து உறுப்பினர்களுக்கும் முறையாக தகவல் தெரிவிக்கப்படும் என ஊராட்சி தலைவர் தெரிவித்தார்.


Next Story