தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்


தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x

தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது.

புதுக்கோட்டை

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராயம், வழிப்பறி உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும், இவைகளுக்கு முழு பொறுப்பேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக பதவி விலக வலியுறுத்தியும், அ.தி.மு.க. புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழகம் சார்பில், இன்று (திங்கட் கிழமை) காலை 10 மணியளவில் எனது தலைமையில் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தலைமை கழகச் செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழகம் மற்றும் சார்பு அமைப்புகளில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், கழக உடன் பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story