தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமையை கண்டித்து மயிலாடுதுறையில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமையை கண்டித்து மயிலாடுதுறையில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமையை கண்டித்து தி.மு.க. மகளிர் அணி மற்றும் தொண்டரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் உமாதேவி தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உமாமகேஸ்வரி சங்கர், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் கண்ணகி பன்னீர்செல்வம், சுபாநெடுஞ்செழியன், ஒன்றியக்குழு தலைவர்கள் காமாட்சி மூர்த்தி, நந்தினி ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் எம்.எல்.ஏ.க்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
பாலியல் வன்கொடுமை
மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்தும், பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் சீர்காழி நகரசபை தலைவர் துர்காபரமேஸ்வரி, ஒன்றியக்குழுத் தலைவர் கமலஜோதி தேவேந்திரன், பேரூராட்சி தலைவர்கள் குணசங்கரி குமரவேல், பூங்கொடி அலெக்சாண்டர், கண்மணிஅறிவுவடிவழகன் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.