வரும் 28-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


வரும் 28-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x

வரும் 28-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

சென்னை,

இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள்கள் கூட்டம் வருகிற 28-05-2022 சனிக்கிழமை காலை 10.30 மணி அளவில், சென்னை , அண்ணா அறிவாலயம், "கலைஞர் அரங்கத்தில்" நடைபெறும்.

அப்போது மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா குறித்து ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story