நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கள்ளக்குறிச்சியில் தி.மு.க.வினர் உண்ணாவிரதம்: மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு
உண்ணாவிரத போராட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அதை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பாரதீய ஜனதா அரசு மற்றும் தமிழக கவர்னரை கண்டித்தும் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி கள்ளக்குறிச்சி தெற்கு, வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
இதற்கு கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம். கார்த்திகேயன் எம்.எல்.ஏ.தலைமை தாங்கினார். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட செயலாளர் உதயசூரியன் எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி துணை செயலாளர் அங்கையற்கண்ணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பு
இதில் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.என்.டி.முருகன், தெற்கு மாவட்ட துணை செயலாளர்கள் புவனேஸ்வரி பெருமாள், காமராஜ், வடக்கு மாவட்ட துணை செயலாளர்கள் வாணியந்தல் ஆறுமுகம், பாப்பாத்தி நடராஜன், கள்ளக்குறிச்சி நகர செயலாளர் சுப்ராயலு, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், அரவிந்தன், அன்புமணிமாறன், நெடுஞ்செழியன், அண்ணாதுரை, பேரூர் கழக செயலாளர் மலையரசன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தாகப்பிள்ளை, துணை அமைப்பாளர் அருள், டாக்டர்.பர்னாலா, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் இளங்கோவன், மாவட்ட அமைப்பாளர் அஸ்வின் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.