தி.மு.க. கொடியேற்று விழா


தி.மு.க. கொடியேற்று விழா
x

சிவந்திபுரத்தில் கருணாநிதி பிறந்தநாளையொட்டி தி.மு.க. கொடியேற்றப்பட்டது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

அம்பை யூனியன் சிவந்திபுரம், அடையக்கருங்குளம், அயன்திருவாலீஸ்வரம், வெள்ளங்குளி வாகைகுளம், போன்ற பஞ்சாயத்துகளில் கருணாநிதி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. சிவந்திபுரத்தில் நடந்த விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர் கலந்துகொண்டு மெயின் ரோட்டில் கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் அருண் தபசு பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் ஆட்டோ சேகர், ஒன்றிய துணைச் செயலாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதி நெடுஞ்செழியன், நிர்வாகிகள் வீரபேச்சு, கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

அயன்திருவாலீஸ்வரம் பகுதியில் அம்பை யூனியன் தலைவர் பரணி சேகர் கட்சி கொடியேற்றினார். பின்னர் கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவியை அவர் வழங்கினார்.

அடையக்கருங்குளத்தில் அன்னை ஜோதி சேவா டிரஸ்ட் சிறப்பு பள்ளியில் உள்ள குழந்தைகளுக்கு காலை, மதியம் உணவும், இனிப்பும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆதி திராவிட நலக்குழு அமைப்பாளர் பாலச்சந்தர், ஒன்றிய குழு துணை தலைவர் ஞானகனி ஸ்டான்லி, ஒன்றிய அவை தலைவர் முத்துப்பாண்டியன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Related Tags :
Next Story