தி.மு.க. கொடியேற்று விழா


தி.மு.க. கொடியேற்று விழா
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 6:46 PM GMT)

கடையம் அருகே தி.மு.க. கொடியேற்று விழா நடைபெற்றது.

தென்காசி

கடையம்:

மறைந்த தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, கடையம் அருகே காவூரில் கொடியேற்று விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாநில சுற்றுச்சூழல் அணி தலைவருமான பூங்கோதை கலந்து கொண்டு கட்சி கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் தி.மு.க. அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினார்.

கிளை செயலாளர் அருணாசலம், கணேசன், பச்சைமால், சங்கரலிங்கபுரம் கணேசன், கோதண்டராமபுரம் ஜம்பு, காவூர் சண்முகவேல், வழக்கறிஞர் அணி சிவகுமார், ஜெப ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story