தி.மு.க. பொதுக்கூட்டம்


தி.மு.க. பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 2 May 2023 7:00 PM GMT (Updated: 2 May 2023 7:00 PM GMT)

நெய்க்காரபட்டி அருகே தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

திண்டுக்கல்

தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவையொட்டி திண்டுக்கல் மேற்கு மாவட்டம் தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் வயலூரில் பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். தொப்பம்பட்டி ஒன்றிய துணைச் செயலாளர் நாகராஜன் வரவேற்றார்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக உணவுத்துறை அமைச்சரும், திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளருமான அர.சக்கரபாணி கலந்துகொண்டு பேசினார். தி.மு.க. தலைமை பேச்சாளர் கந்திலி கரிகாலன், திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளர் ராஜாமணி, மாநில மாணவர் அணி துணைச் செயலாளர் பொன்ராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஹரிஹரசுதன், ஒன்றிய குழு தலைவர் சத்தியபுவனா, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் கிருஷ்ணசாமி, ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story