தி.மு.க. பொதுக் கூட்டம்
நெல்லை மேலப்பாளையத்தில் தி.மு.க. பொதுக் கூட்டம் நடந்தது.
நெல்லை மாநகர தி.மு.க இளைஞர் அணி சார்பில் மேலப்பாளையம் பஜார் திடலில் கலைஞர் நூற்றாண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநகர இளைஞர் அணி அமைப்பாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான கருப்பசாமி கோட்டையப்பன் வரவேற்றார். தி.மு.க. மாநில செய்தி தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுபான்மையினர் மக்களுக்காக பணியாற்றி வருகிறார். நாடு முழுவதும் பா.ஜனதாவை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் வேறுபட்டு கிடந்த நேரத்தில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதை முடிவு செய்ய அனைவரும் அணி திரள வேண்டும் எனக்கூறி இந்தியா கூட்டணி' உருவாக தி.மு.க முக்கிய பங்காற்றி உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய அளவிலான இந்தியா கூட்டணி மக்களின் ஆதரவோடு வெற்றி பெறும்" என்றார்.
கூட்டத்தில் நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், மாநகர செயலர் சு.சுப்பிரமணியன், மாநில வர்த்தகர் அணி இணைச்செயலர் மாலைராஜா, மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தீர்மானக்குழு உறுப்பினர் சுப.சீதாராமன், மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த் உள்பட பலர் கலந்துகொண்டனர்.