திருக்கோவிலூரில் தி.மு.க.பொதுக்கூட்டம்


திருக்கோவிலூரில் தி.மு.க.பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 11 May 2023 6:45 PM GMT (Updated: 11 May 2023 6:45 PM GMT)

திருக்கோவிலூரில் தி.மு.க.பொதுக்கூட்டம் நடந்தது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர், மே.12-

திருக்கோவிலூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஜி.அரியூர் கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் எம்.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் எஸ்.அய்யனார், வி.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு துணை தலைவர் தனம்சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர் மஞ்சுளாகணேஷ், கிளை செயலாளர் ராமு, குணசேகர், பழனி, சரண்ராஜ், ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றியக்குழு தலைவர் அஞ்சலாட்சி அரசகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., உதயசூரியன் எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் 2 ஆண்டு கால சாதனைகள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் உதயா, திருக்கோவிலூர் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் ஏ.கண்ணன், ஒன்றிய துணை செயலாளர்கள் ஜி.தணிகாசலம், இ.முருகன், செல்லமணிசுப்பிரமணி, ஒன்றிய பொருளாளர் சி.காமராஜ், மாவட்ட பிரதிநிதிகள் கே.ஆர்.பி.பிரகாஷ், ஏ.ஆறுமுகம், ஆர்.ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி பாண்டியன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story