கவர்னரை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப்படுத்தியுள்ளது - வானதி சீனிவாசன்


கவர்னரை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப்படுத்தியுள்ளது - வானதி சீனிவாசன்
x
தினத்தந்தி 9 Jan 2023 9:55 AM GMT (Updated: 9 Jan 2023 9:59 AM GMT)

கவர்னரை சட்டப்பேரவைக்கு அழைத்து திமுக அரசு அவமானப்படுத்தியுள்ளது என்று வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

கவர்னர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து பாதிலேயே வெளியேறியது குறித்து பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:-

இன்றைக்கு சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியினர் நடந்துகொண்ட போக்கு மாநில நலனுக்கு உகந்தது அல்ல. கவர்னர் உரையை தயாரித்து அதை கவர்னரிடம் வழங்கி ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். கவர்னர் அரசு கொடுக்கும் உரையில் இருப்பதை பேசுவார். ஆனால் கவர்னர் திமுக அரசு நினைப்பதை எல்லாம் பேச வேண்டும் என்று அவசியமில்லை.

திமுக அரசு சித்தாந்தை கவர்னர் போற்றிப் புகழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். திமுக அரசு சித்தாந்தத்தை கவர்னர் மீது திணித்துள்ளீர்கள். அரசு சொல்வதை மட்டுமே பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தம் கவர்னருக்கு இல்லை. நீங்கள் உங்களது அதிகாரத்தை கவர்னர் மீது திணிக்க முயல்கிறீர்கள். ஓரு கவர்னரை அவமதித்துள்ளீர்கள். கவர்னரை அசிங்கப்படுத்துகிறீர்கள். கவர்னரை அவமதிக்கும் கட்சிகள் ஜனநாயகத்திற்கு விரோதமான கட்சிகள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story