தி.மு.க. செயலாளரிடம் மைக்கை பிடுங்கிய மாவட்ட பஞ்சாயத்து தலைவியால் பரபரப்பு


தி.மு.க. செயலாளரிடம் மைக்கை பிடுங்கிய மாவட்ட பஞ்சாயத்து தலைவியால் பரபரப்பு
x

தென்காசியில் தி.மு.க. செயலாளரிடம் மைக்கை பிடுங்கிய மாவட்ட பஞ்சாயத்து தலைவியால் பரபரப்பு ஏற்பட்டது.

தென்காசி

மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து நேற்று தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் தி.மு.க. மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் பங்கேற்று பேசினார். அவர் பேசி முடித்த பின்னர், மழை வருவது போன்று உள்ளதால், கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை தொடருங்கள் என்று கூறி விட்டு மேடையில் இருந்து இறங்க முயன்றார். அப்போது அவரிடம் இருந்த மைக்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வி பிடுங்கியவாறு ஆவேசமாக சத்தம் போட்டார். மணிப்பூரைப் பற்றி நீங்கள் என்ன பேசுகிறீர்கள்? என்று கூறி மாவட்ட செயலாளரை ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதற்கு அங்கிருந்த மற்ற நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பினரையும் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சமாதானப்படுத்தினார். பின்னர் மாவட்ட பஞ்சாயத்து தலைவியை அங்கிருந்து அழைத்து சென்றனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த சம்பவ காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1 More update

Related Tags :
Next Story