ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரை, அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் - அமைச்சர் மூர்த்தி பேச்சு


ஈரோடு இடைத்தேர்தலில்  தி.மு.க. கூட்டணி வேட்பாளரை,  அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைப்போம் - அமைச்சர் மூர்த்தி பேச்சு
x

ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மதுரை


ஈரோடு இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

அரசின் சாதனைகள்

மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதில் அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பணிக்கு செல்ல உள்ளோம். 1-ந்தேதி (நாளை) காலை 9 மணியளவில் வாடிப்பட்டி அருகே ஆண்டிபட்டிபங்களாவில் வடக்கு மாவட்ட தி.மு.க.வினர் ஒன்று சேர்ந்து அங்கிருந்து ஈரோடு நோக்கி செல்வோம்.

தேர்தல் பிரசாரத்தின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் சாதனைகளை வீடு, வீடாக சென்று எடுத்துக்கூறி வாக்குகள் சேகரிப்போம். தி.மு.க. கூட்டணி வேட்பாளரை, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்வோம்.

அரசு விழா

வருகிற 6-ந்தேதி மதுரையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. அதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 1 லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இது வெறும் விழாவாக இல்லாமல் மாநாடு போல் நடத்தப்படும். அதில் அனைத்து அணியினரும் கலந்து கொள்ள வேண்டும். முன்னதாக விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அளிக்கப்படும் வரவேற்பிலும் பெரும் திரளாக அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story