நெல்லையில் தி.மு.க. மகளிர் அணி ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, நெல்லையில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து, நெல்லையில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்களைக் கண்டித்தும், அதனை கட்டுப்படுத்த தவறிய பா.ஜனதா மத்திய-மாநில அரசுகளை கண்டித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தி.மு.க. மகளிர் அணி சார்பில் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி நெல்லை வண்ணார்பேட்டை மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நெல்லை மாவட்ட தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநில மகளிர் தொண்டர் அணி துணை செயலாளர் விஜிலா சத்யானந்த் தலைமை தாங்கினார்.
கிழக்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் பிரேமா, மத்திய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகேசுவரி, மத்திய மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் அனிதா, மாநகர மகளிர் அமைப்பாளர் சவுந்தரம், மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.
திரளானவர்கள் பங்கேற்பு
இதில் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாநகர தி.மு.க செயலாளர் சு.சுப்பிரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, தலைமை செயற்குழு உறுப்பினர் பிரபாகரன், கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், பாளையங்கோட்டை யூனியன் தலைவர் கே.எஸ்.தங்கபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், தலைமை செயற்குழு உறுப்பினர் பேச்சிப்பாண்டியன், மாநகர பகுதி செயலாளர்கள், முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் வில்சன் மணித்துரை, மாவட்ட துணைச்செயலாளர் எஸ்.வி.சுரேஷ், மானூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாநகர துணை செயலாளர் மூளிகுளம் பிரபு, கவுன்சிலர்கள் உள்பட திரளானவர்கள் பங்கேற்றனர். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த தவறியதாக பா.ஜனதா அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.