தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகளுக்கு நேர்காணல்
கோவை மண்டல தி.மு.க. மாணவர் அணி நிர்வாகிகளுக்கு நேர்காணல் நடந்தது
கோயம்புத்தூர்
கோவை மண்டல தி.மு.க. மாணவர் அணி சார்பில் கோவை தெற்கு, வடக்கு, மாநகர், கரூர், திருப்பூர் வடக்கு, தெற்கு, ஈரோடு வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளின் மாணவர் அணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான நேர்காணல் கோவை காளப்பட்டி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
மாணவர் அணி அமைப்பாளர் எழிலரசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாணவர் அணி வழிகாட்டுதல் பொறுப்பாளரும், துணை அமைப்பாளருமான ஆ.ராசா எம்.பி., அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் நேர்காணலை தொடங்கி வைத்தனர். இதில் மாணவர் அணி தலைவர் ராஜீவ்காந்தி, இணை-துணை செயலாளர்கள் ஜெரால்டு, வி.ஜி.கோகுல், பூரண சங்கீதா, வீரமணி மற்றும் கோவை மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story